திமுக காங்கிரஸ் என்பது ஒட்ட வைத்த கண்ணாடி

Loading

தேர்தல் சோதனையில் சாமானியர்களை துன்புறுத்த வேண்டாம்: ஈரோடு ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
திமுக அரசைக் கண்டித்து ஈரோடு ரயில் நிலைய சந்திப்பு அருகே அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது சாதாரண மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்றும், தவறு செய்பவர்கள் மீது மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார். திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது ‘ஒட்ட வைத்த கண்ணாடி’ போன்றது என்று விமர்சித்த அவர், தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து தகவல் வந்தவுடன் முறைப்படி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
0Shares