உரிமம் பெற்ற ஆயுதங்களை கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும்

Loading

ஆயுத உரிமம் பெற்றுள்ள அனைத்து நபர்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கி உரிமம் பெற்ற ஆயுதங்களை கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் : திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் மார்ச் 16: தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தல்-2026 தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை அறிவித்ததையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலை உறுதி செய்யும் நோக்கில், மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் பொருட்டு, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாவட்டத்தில் ஆயுத உரிமம் பெற்றுள்ள அனைத்து நபர்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கி உரிமம் பெற்ற ஆயுதங்களை கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆயுத உரிமம் பெற்றவர்களும் தங்களது ஆயுதங்களை உடனடியாக தங்களது வசிப்பிடத்திற்கு உட்பட்ட அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.ஒப்படைக்கப்படும் ஆயுதங்களுக்கு உரிய ரசீது வழங்கப்படும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் செயல்முறை நிறைவடையும் வரை ஆயுதங்கள் காவல் துறையின் பாதுகாப்பில் வைக்கப்படும்.
அரசு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அல்லது சட்டப்படி விலக்கு அளிக்கப்பட்டவர்கள் தவிர, மற்ற அனைவரும் இந்த உத்தரவை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். உடனடியாக ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது ஆயுதச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்கள் அனைவரும் தேர்தல் காலத்தில் அமைதியை பேணியும், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கவும் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares