பலபட்டரைஸ்ரீசின்னமுனியப்பன்திருக்கோயில்

Loading

பலபட்டரை, அருள்மிகு “ஸ்ரீ சின்ன முனியப்பன் திருக்கோயில் கோயில்” மாசி திருவிழா !
சேலம் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சின்ன முனியப்பன் திருக்கோயில் மாசி திருவிழா, ஸ்ரீ விசுவாவசு வருடம் மாசி மாதம் 26 ம் நாள் செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்து முனியப்பனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இரவு, சக்தி அழைத்தல், பூ கரகம் எடுத்தல் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மறுநாள், மாசி மாதம் 27ஆம் நாள் புதன்கிழமை காலை அக்னி கரகம் எடுத்தல் அழகு குத்துதல், பொங்கல் வைத்தல், முப்பூசை, சத்தாபரண நிகழ்ச்சி, சுவாமி ஊர்வலமும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன், சேலம் மாநகர மேயர் இராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் கே.ஆர்.முருகன், மாநகரச் செயலாளர் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் பூபதி, 8 வந்து கோட்டச் செயலாளர் செல்வம், மாமன்ற உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
அருள்மிகு ஸ்ரீ சின்ன முனியப்பன் திருக்கோயில் மாசி திருவிழாவினை, அறங்காவலர் குழு தலைவர் தனசேகர், அறங்காவலர்கள் அல்லிமுத்து, வள்ளி, மணி, சரவணன் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர், இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0Shares