தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி :
திருவள்ளூர் மார்ச் 08 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்நோக்கு கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் காணொளி காட்சி வாயிலாக மின்னனு திரையில் பார்வையிட்டு, பின் விசன் 2030 திருவள்ளூர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஐந்தாண்டு சாதனை மலர்களை வெளியிட மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), துரைசந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா,கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ப.ஜெயஸ்ரீ மற்றும் பல்துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் வட்டம், வேப்பம்பட்டில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 13 கட்டுமானப் பணிகளையும், செவ்வாய்பேட்டையில் ரூ.8.1 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 15 கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை  விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
0Shares