ஸ்ரீ அரவிந்த அன்னைபள்ளியின் 2026 ம் ஆண்டு விழா
![]()
கோவை
கோவை சங்கனூர் சாலை, நேதாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள, ஸ்ரீ அரவிந்த அன்னை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 2026 ம் ஆண்டுக்கான ஆண்டு விழா நிகழ்ச்சி கிரிநித் ஹாலில் நடைபெற்றது.
இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியை, பள்ளியின் கரஸ்பான்டட் பால சுந்தரம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

கோவை சங்கனூர் சாலை, நேதாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள, ஸ்ரீ அரவிந்த அன்னை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 2026 ம் ஆண்டுக்கான ஆண்டு விழா நிகழ்ச்சி கிரிநித் ஹாலில் நடைபெற்றது.
இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியை, பள்ளியின் கரஸ்பான்டட் பால சுந்தரம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துணை ஆட்சியர் மணிமேகலை குத்துவிளக்கேற்றி வைத்து ஆண்டு விழாவை துவக்கி வைத்தார்.
சுதர்சன் கல்லூரியின் இயக்குனர் ஹரிஸ் பாலசுந்தரம் வரவேற்புரை வழங்கினார்..தொடர்ந்து பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும், பள்ளியின் வரவு செலவுகளை ஆண்டறிக்கையாக, பள்ளியின் தலைமை ஆசிரியை பிரியா வாசித்தார். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட
கிருஷ்ண ராஜ், டிஎன். பி.எம்.ஹெச்.எஸ்.என்
அசோசியேஷன் மற்றும்
கோவை மக்கள் நல்லுறவு நலச்சங்கத்தின் தலைவர் இ.சுக்குருல்லா பாபு ஆகியோர் சிறப்புரையற்றினார். இதனை
தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் பல்வேறு, கலை, இயக்கிய நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் சுட்டி குழந்தைகள் தங்களது, குழு மற்றும் தனித்திறன்களை வெளிபடுத்தினர். இதனை கண்ட மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்து, உற்ச்சாக படுத்தினர். இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில், யோகேஸ்வரி, சங்கீதா ராதாகிருஷ்ணன், வைஸ்ணவி, ஸ்டெல்லா கீதா, வசந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

