ஸ்ரீ வாசவி கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு

Loading

 

ஸ்ரீ வாசவி கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வுபயிற்சி 

உயர் கல்வி மாணவர்களிடையே புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் தொழில்முனைவோர்
திறன்களை ஊக்கப்படுத்துவதற்க்காக அகமதாபாத்தை சார்ந்த இந்திய தொழில்முனைவோர் மேம்பட்டு
நிறுவனம் (EDII) ஈரோடு ஸ்ரீ வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் கல்லூரி
முதல்வர் முனைவர் மலர்விழி அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இந்திய தொழில்முனைவோர்
மேம்பட்டு நிறுவன திட்ட அலுவலர் முனைவர் ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தனது
சிறப்புரையில், உயர் கல்வி மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை வாய்ப்பு
உருவாக்குபவர்களாக மாற, தங்களின் கற்பனை மற்றும் படைப்பாற்றலை, புத்தாக்கம் வாயிலாக ஸ்டார்ட்
அப் நிறுவனகளை தொடங்குவதன் மூலமாகவோ அல்லது தொழில்முனைவோர் திறன்களை பயன்படுத்தி
புதிய நிறுவனங்கள் தொடங்குவதன் மூலமாகவோ, வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று
தெரிவித்தார்.
மேலும் அகமதாபாத் இந்திய தொழில்முனைவோர் மேம்பட்டு நிறுவனத்தில் அகில இந்திய
தொழில் நுட்ப பயிலாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை பயின்றவர்கள் 140 க்கு மேற்பட்ட ஸ்டார்ட்
அப் நிறுவனங்களை தொடங்கி உள்ளதாகவும், இதில் கஸீல் படேல் 4754 கோடி புரிந்துணர்வு
ஒப்பந்தத்தை குஜராத் அரசிடம் பெற்றுள்ளதாகவும் கூறினார். உயர்கல்வி மாணவர்கள் தங்கள் புத்தாக்க
திறன்களை வெளிப்படுத்தி புதிய பொருட்களை உருவாக்குவதற்க்கான செலவீனங்களுக்காக
மாணவர்களின் படைப்பாற்றல் கருத்து திட்டங்களுக்கு வல்லுநர் குழுக்கள் வாயிலாக பகுப்பாய்வு செய்து
தேர்வு செய்யப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு 15 இலட்சம் வரை மானியம் வழங்குவதாக கூறினார்.
புத்தாக்க கருத்து திட்டங்களுக்கான காப்புரிமை விண்ணப்ப பதிவில் 2024-2025 ஆண்டில் இந்திய அளவில்
தமிழ்நாடு 15440 பதிவு செய்து முதன்மை மாநிலமாக உள்ளது, இரண்டாவது இடத்தில் கர்நாடகா 8371
காப்புரிமை விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து கல்லூரி
மனவர்களையிடயே தொழில் தொடங்க ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய தொழில்முனைவோர்
மேம்பட்டு நிறுவனத்தில் பயிற்சி பெரும் பெண் தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்கள் இரண்டு
நாட்கள் காட்சி படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மேற்கண்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
முனைவர் கருணாம்பிகை , முனைவர் ஜீவா ரேகா , முனைவர் அருளாதேவி , முனைவர் வேலுமணி
ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தினர்.

0Shares