இரண்டாமாண்டு தேர்வு ஆட்சியர்மு.பிரதாப்தகவல்
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு விவரங்கள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் மார்ச் 02 : திருவள்ளூர் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு,முதலாமாண்டு அரசு பொதுத் தேர்வு 02.03..2026 முதல் 27.03.2026 வரையில் நடைபெறுகிறது. தேர்வில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, பார்வையற்றோர் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் 16 மாணவர்கள், பூந்தமல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர். அதில் கி.திருநாவுக்கரசு என்ற மாணவன் தேர்வினை கணினி மூலமாக தேர்வு எழுதுகிறார். 02.03.2026 அன்று (திங்கள் கிழமை) நடைபெறும் தேர்வில் 271 ஆசிரியர்கள் சொல்வதை எழுதுபவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வில் 117 மையங்களில் 14119 மாணவர்களும், 15512 மாணவிகளும் ஆக மொத்தம் 29631 மாணவ,மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.+1 ARREAR மாணவர்களில் 929 மாணவர்களும் 436 மாணவிகளும் ஆக மொத்தம் 1365 தேர்வர்கள் தேர்வினை எழுதுகின்றனர். தனித்தேர்வு 18 மையங்களில் 1110 மாணவர்களும், 1029 மாணவிகளும் மற்றும் இரண்டாம் பாலினத்தவர் 2 ஆக மொத்தம் 2141 தேர்வர்கள் தேர்வினை எழுதுகின்றனர். மொத்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் – 5 மொத்த தேர்வு மையங்கள் – 117 மொத்த வழித்தடங்கள் -29 வழக்கமான மாணவர்கள் – 29631 +1 ARREAR CANDIDATE – 1365 PRIVATE CANDIDATE – 2141 மொத்த மாணவர்கள் 33137 ஆகும்.
இத்தேர்வுக்காக முதன்மை கண்காணிப்பாளர்கள் 117, துறை அலுவலர்கள் 117, கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் 12, நிலையான,பறக்கும் படையினர் 250, அறை கண்காணிப்பாளர்கள் 1750, சொல்வதை எழுதுபவர்கள் 271, மொத்தம் 2517 ஆக மொத்தம் 2517 ஆசிரியர்கள் இக்கல்வியாண்டில் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

