வேளாண்மை & உழவர் நலத்துறை விவசாயிகள்கூட்டம்

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் :

திருவள்ளூர் மார்ச் 01 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் தலைமை தாங்கினார்
கூட்டத்தில் சம்பா பருவ நெல் கொள்முதலுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்,தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை,வேளாண்மை பொறியியல் துறை,வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் 16 விவசாயிகளுக்கு ரூ.1,00,73,980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும்  இக்கூட்டத்தில் 147-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் க.செல்வராஜூ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.வேதவல்லி, நிர்வாக இயக்குநர் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, இணை பதிவாளர் கூட்டுறவு துறை, இணை இயக்குநர் கால்நடை துறை, தோட்டக்கலை துணை இயக்குநர், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உள்பட பல்வேறு துறைகளின் மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares