புரட்சித்தலைவி அம்மா78வது பிறந்தநாள் கூட்டம்

Loading

பட்டரைப் பெரும்புதூரில் புரட்சித்தலைவி அம்மாவின் 78 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : இறந்து போனவர்களுடைய வாக்குகளை செலுத்தி தான் ஆட்சிக்கு வந்தது திமுக : முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு :
திருவள்ளூர் பிப் 28 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பட்டரைப் பெரும்புதூரில் புரட்சித்தலைவி அம்மாவின் 78 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவள்ளூர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எம்.சத்தியமூர்த்தி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர்  மேற்கு மாவட்ட செயலாளர் பி. வி. ரமணா தலைமை தாங்கினார்.
பூண்டி ஒன்றிய செயலாளர் ராமஞ்சேரி எஸ்.மாதவன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஞானகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.நேசன், மாவட்ட துணை செயலாளர் எல்.செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேபிஎம் எழிலரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் புங்கத்தூர் டி.தேவா, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வள்ளியம்மா பேட்டை  இ.சீனிவாசன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இலக்கிய அணி செயலாளர் செய்தி தொடர்பாளர் எஸ் எஸ் வைகை செல்வன், கழக அமைப்பு செயலாளர் ஆர் மனோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து ஆயிரம் பெண்களுக்கு சேலையும்,  20 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ. 5 ஆயிரம் வீதம் 20 பேருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி சிறப்புரையாற்றினர்.
சாதாரண ஒரு தொண்டன் அந்த கட்சிக்கு தலைமை தாங்க முடியும் என்று நிரூபித்த ஒரே இயக்கம் நம்முடைய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் ஒரு சாமானியன் முதலமைச்சராக முடியும் என்று நிரூபித்து இயக்கமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான். இறந்து போனவர்களுடைய வாக்குகளை செலுத்தி தான் ஆட்சிக்கு வந்தது திமுக என்றும்  திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும்  ஊழல்  பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும்,  தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் 100 நாள் வேலைக்கு சம்பளம் தருவதில்லை, குடிநீர் வரிகட்டினால்  தான்  சம்பளம் தருவேன் என  ஊர் பஞ்சாயத்து தலைவர் மிரட்டுகிற நிலை தான் தமிழகத்தில் நிலவுகிறது என்றும், அதனால் இதற்கெல்லாம் முடிவு கட்ட வருகிற சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு  பிறகு  புரட்சித் தமிழர் எடப்பாடியார் இந்த இயக்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். எனவே திருவள்ளூர், திருத்தணி தொகுதியும் வெற்றிவாகை சூடி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  அதனையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தோல்வி அடைந்த அரசாக திமுக திகழ்வதாகவும்,  73 ஆண்டுகளில் கடன் தொகை நான்கரை லட்சம் கோடி, இந்த திமுக 5 ஆட்சியில்  6 லட்சம் கோடி என்றும், ஒவ்வொரு குடும்பமும் 4 லட்சம் கடனாளியாக ஆக்கியது தான் திமுகவின் லட்சணம் என்றும் குற்றம்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய் அறியாமல்,  புரியாமல் பேசுகிறார். அரசியல் புரிதல் அவருக்கு இல்லை என்றும், அதிமுக என்பது ஒரு மலை,  மோதினால் மண்டைதான் உடையும் என சசிகலா கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். செங்கோட்டையனார் விஜய் கட்சியில் சேர்ந்ததால் தங்கள் கட்சி அதிமுக வாக்குகளை அதிக அளவில் பெரும் என்று கூறி வருவது குறித்து கேள்விக்கு இது விஜயின் கனவு அதுவும் பகல் கனவு என்றும் நக்கலடித்தார்.
0Shares