தளபதி மு. க .ஸ்டாலின் அவர்களின் 73 வது பிறந்த நாள்

Loading

தளபதி மு. க .ஸ்டாலின் அவர்களின் 73 வது பிறந்த நாள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி மு. க .ஸ்டாலின் அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக திண்டல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு ஸ்கூல் பேக் ,மற்றும் நோட் புக் , பிளேட் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி .சி. சந்திரகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் திருமதி வீரமணி ஜெயக்குமார், மாவட்ட கழக துணை செயலாளர் ஆ.செந்தில்குமார்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம்,மாநகரக் கழக செயலாளர் மு. சுப்ரமணியம்,பகுதி கழக செயலாளர்கள் அக்னி சந்துரு, வி.சி நடராஜன், முருகேசன், மாமன்ற உறுப்பினர் கீர்த்தனா பிரவீன், வட்ட கழக செயலாளர் தமிழரசன், சரவணன் மற்றும்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0Shares