இந்தியகுடியரசுகட்சிமாநிலதலைவர்செ.கு.தமிழரசன்பேட்டி

Loading

இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு. தமிழரசன் கூட்டணி குறித்து பேட்டி !
வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி  சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு. தமிழரசன் கூறினார்.
இந்திய குடியரசு கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய தேர்தல் முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது என்னுடைய முடிவு மட்டுமல்ல. அம்பேத்கர்,அவரைப் பின்தொடர்ந்து வந்த தலைவர்களின் முடிவும் இதுதான். சிறுபான்மை இன மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இருக்கும் நிலையில், அரசியல் அதிகாரத்தில் மட்டும் இட ஒதுக்கீடு என்பது 10 ஆண்டுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.  இது ஒப்பந்த அடிப்படையில் ஆன அரசியல் இட ஒதுக்கீடாக உள்ளது.
தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஜனநாயக ரீதியில் தேர்தலில் எங்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.  அதையே ஒவ்வொரு தேர்தலிலும் கடைபிடித்து வருகிறோம். வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம் என்றார். பேட்டியின் போது, கட்சி நிர்வாகிகள் திரளானோர் உடனிருந்தனர்.
0Shares