மாற்றுத்திறனாளிகளுக்கு23,24அளவீட்டு முகாம்
![]()
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 23,24 ஆகிய தேதிகளில் அளவீட்டு முகாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் பிப் 21 : திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 23,24 ஆகிய தேதிகளில் அளவீட்டு முகாம் திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.சசிகாந்த செந்தில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 3 ஆண்டுகளுக்குள் உபகரணங்கள் பெறப்படாத மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு Artifical Limbs Manufacturing Corporation of India, ALIMCO Auxiliary production Centre வாயிலாக மூன்று சக்கர சைக்கிள்,சக்கர நாற்காலி,ஊன்று கோல்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி,வடிவமைக்கப்பட்ட கால் தாங்கிகள் 6. வடிவமைக்கப்பட்ட செயற்கை அவயங்கள், காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள்,ரோலேட்டர் ஆகிய உதவி உபகரணங்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான உபகரணங்கள் கமோட் வீல்சேர்,முழங்கால் பிரேஸ், வாக்கர், நடை உபகரணம் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளவீட்டு முகாம் நடைபெறவுள்ளது.
அதன்படி 23.02.2026 திங்கள் அன்று கும்மிடிப்பூண்டி DSC திருமணமஹால் காலை 9 மணி முதல் 1 மணி வரை, 24.02.2026 செவ்வாய் திருவள்ளூர் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கம் காலை 9 மணி முதல் 1 மணி வரை அளவீட்டு முகாம் நடைபெறும்
முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான UDID அட்டை 40% மேல் உள்ளவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை அல்லது வருமான சான்று, பாஸ்போர்ட் புகைப்படம்-2, 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு UDID அட்டை தவிர்த்து மேற்கண்ட அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் அளவீட்டு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

