வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு

Loading

திருவள்ளூர் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் முதலாம் காலாண்டு கூட்டம் :
திருவள்ளூர் பிப் 21 : திருவள்ளூர் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் முதலாம் காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் வரவேற்புடன் நடைபெற்றது.
கூட்டத்தில் எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் தீருதவி தொகை உரிய காலக்கெடுவிற்குள் வழங்குவது தொடர்பாகவும், வன்கொடுமை நிலுவை வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் சுபம் தீமன்,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி (திருத்தணி), சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் செ.தமிழ் இனியன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அலுவலர்கள் திருவள்ளூர்/ஆவடி, மற்றும் அலுவல் சாரா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0Shares