41 அடி உயர சிவலிங்கத்துக்கு1008 பால்குட அபிஷேகம்

Loading

திருவள்ளூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பொம்மியம்மாள் சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில்  41 அடி உயர சிவலிங்கத்துக்கு ராட்சத கிரேன் மூலம் 1008 பால்குட அபிஷேகம் : 
திருவள்ளூர் பிப் 17 : மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ பொம்மியம்மாள் சமேத முக்தீஸ்வரர்  ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு  காலை 6 மணி முதல் சிறப்பு அபிஷேகம் ஆராதனை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதனையடுத்து  மாலை 5 மணி அளவில் கோவிலின் முகப்பில்  41 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்துக்கு 1008 பால்குட அபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ராட்சத கிரேன் மூலம்  சிவலிங்கத்திற்கு நடைபெற்ற பால் அபிஷேக நிகழ்ச்சியில் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் காணிக்கையாக பாலை கொடுத்து பிரார்த்தனை செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
0Shares