தச்சன் தோட்டம் பகுதியில் சாலை சீரமைக்கும் பணி
![]()
கோவை
கோவை இடையர் பாளையம் அடுத்த தச்சன் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணிகளை துவக்கி வைத்த மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்..
கோவை மாவட்டம் இடையர் பாளையம் சாலை தச்சன் தோட்டம், பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில், ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில், 204 எண்ணிக்கையிலான சாலைகள் சீரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த பணிகளை துவக்கி வைத்தனர். தொடர்ந்து சம்பந்த பட்ட அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்கவும், தரமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் சம்பத், தமிழ்செல்வன், கரு பழனியப்பன், மாநகர தலைமை பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர் துரைமுருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

