திருவள்ளூர்மக்கள்குறை நாள்பொதுமக்களிடம்442மனு
![]()
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
திருவள்ளூர் பிப் 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 442 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இதில், நிலம் சம்பந்தமாக 66 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 35 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 42 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி18 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 281 மனுக்கள் என ஆக மொத்தம் 442 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், துணை ஆட்சியர் (பயிற்சி) செ.சண்முகபிரீத்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நிர்மலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

