மின்கம்பி மிகவும் தாழ்வாகவும்  கைக்கு எட்டும் தூரத்தில்

Loading

ஏகாட்டூரில் தாழ்வாக செல்லும் நீ கம்பியால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் : சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு :
திருவள்ளூர் பிப் 04 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் ஏகாட்டூர் ஊராட்சி அன்னை இந்திரா நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் மும்முனை மின் இணைப்புக்கான அமைக்கப்பட்டுள்ள மின்கம்பி மிகவும் தாழ்வாகவும்  கைக்கு எட்டும் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு வாகனமும் சென்றுவர முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது. அதேபோல் திருவிழா காலங்களில் சாமி ஊர்வலத்தை கொண்டு செல்ல முடியாமலும், வீடு கட்டும்போது செங்கல், மணல், ஜல்லி போன்ற பொருட்களை லாரிகளில் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த மும்முனை இணைப்பிற்கான மின்கம்பிக்கு மேலே 11 கே.வி மின் இணைப்புக்கான மின்கம்பி செல்வதால் மும்முனை இணைப்புக்கான மின்கம்பி தாழ்வாகவும், நடந்து செல்லும் போது தலையில் படும் அளவிற்கும் மிகவும் தாழ்வாக இருக்கிறது. அதேபோல் 11 கே.வி. மின்கம்பி வீட்டின் மாடி பகுதி அருகிலேயே செல்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உயிர் பயத்தோடு வாழ்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புயல்,  மழை காலங்களில் மின் இணைப்புக்கான மின்கம்பி அறுந்து கீழே விழும்போது விபத்துக்குள்ளாகி அசம்பாவிதம் ஏற்படும் சம்பவமும் அரங்கேறி இருப்பதாகவும்,  இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும்,  மின்வாரிய அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   எனவே 11 கே.வி.மின்கம்பியை மாற்றி அமைத்து அசம்பாவிதத்தை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0Shares