நகராட்சிமேல்நிலைப்பள்ளியில்கார்நிறுவனபங்களிப்பு
![]()
திருவள்ளுர்
திருவள்ளுர் வட்டம், இராஜாஜி சாலையிலுள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தனியார் கார் நிறுவன சமூக பங்களிப்பு நிதி (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழ் 150 மேசை மற்றும் இருக்கைகள் தொகுப்புகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சொ.கற்பகம், தனியார் கார் நிறுவன துணை பொது மேலாளர் (சிஎஸ்ஆர்) ஹூ மின் ஓ, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் தாமோதரன், திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி, பள்ளி தலைமையாசிரியர் முரளிதர், ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

