ஈரோடு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
![]()
ஈரோடு
ஈரோடு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேலுமணி
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து காவல் நிலையங்கள் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு வடக்கு ரோட்டரி கிளப் மற்றும் கே.எஸ்.ஆர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி, அரசு மருத்துவமனை ரவுண்டானா மேம்பாலம் பகுதியில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேலுமணி அவர்கள் கலந்துகொண்டு, ஹெல்மெட் அணியாமல் வந்த பத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்களை வழங்கி சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து அறிவுறுத்தினார்.
இப்பேரணியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். குறிப்பாக, எமதர்மராஜா வேடமணிந்த நபர் ஒருவர் நூதன முறையில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன் பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் சரவணன் மற்றும் உறுப்பினர் லட்சுமி பேக் ஹவுஸ் ஜெய் சராம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

