மத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் 54-வது பிறந்தநாள் விழா

Loading

ஈரோடு
ஈரோட்டில் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் 54-வது பிறந்தநாள் விழா: 
பகுஜன் சமாஜ் கட்சியினர் புகழஞ்சலி
ஈரோடு மாநகரப் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், சமத்துவத் தலைவருமான மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் 54-வது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மேற்கு மண்டல மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஈரோடு வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து அண்ணனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன்:- “அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்த வழியில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். கடந்த ஜூலை 5-ஆம் தேதி திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட அவரது அரசியல் படுகொலைக்கு நீதி கேட்டு, எங்களது தேசியத் தலைவர் செல்வி மாயாவதி அவர்களின் ஆணைக்கிணங்க தொடர்ந்து போராடி வருகிறோம்.
இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளோம்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், அண்ணன் ஆம்ஸ்ட்ராங் வளர்த்தெடுத்த தம்பிகளாகிய நாங்கள் ஒவ்வொரு பகுதியிலும் தீவிரப் பிரச்சாரம் செய்து, உண்மையான அம்பேத்கர் அரசியலை முன்னெடுப்போம்.
பட்டியலினத் தலைவர்கள் மீது கைவைக்கும் போக்கை இந்த திராவிடக் கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அண்ணனின் ஆன்மா குடியிருக்கும் யானைச் சின்னத்தின் கீழ் அணிதிரண்டு, வரும் தேர்தல்களில் பகுஜன் ஆட்சியை நிலைநிறுத்துவோம்” என்று கூறினார்.
இவ்விழாவில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0Shares