மனிதநேயநிறைவுவாரவிழாவில்பெற்றவர்களுக்குபரிசு
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மனித நேய வாரவிழா நிறைவு விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ,அவர்கள் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் மனிதநேய வார விழா 24.01.2026 முதல் 30.01.2026 வரை நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியாக அரசுத்துறைகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கண்காட்சி அரங்குகளும், இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மாவட்ட தொழில் மையம், தாட்கோ மூலம் சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனைக்கூட்டங்களும், மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக உதகை அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் (NSS) மூலமாக கல்லூரி மாணவ/மாணவியர் மற்றும் அரசு அலுவலர்கள் ஒரு பழங்குடியினர் கிராம குடியிருப்பிற்குச் சென்று அவ்வூரில் படிக்கும் மாணவ/மாணவியருடனும் அவர்தம் குடும்பத்துடனும் தேனீர் அருந்தி மனமகிழ் நிகழ்ச்சியும். நான்காம் நாள் நிகழ்ச்சியாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளிலும் கல்லூரி/ பள்ளி விடுதிகளிலும் பயிலும் மாணவ/ மாணவியர்களை கொண்டு நாட்டியம், நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, போன்ற கலை நிகழ்ச்சிகளும். ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக தொரப்பள்ளி உண்டு உறைவிடப்பள்ளி மாணவ,மாணவிகளின் நாடகம் மற்றும் திரைப்பட குழுவினரைக்கொண்டு கலை நிகழ்ச்சிகளும்,
ஆறாம் நாள் நிகழ்ச்சியாக, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதகை மூலம் அனைத்து மதத்தலைவர்களையும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தலைவர்களையும் மற்றும் சான்றோர்களையும் ஒன்று கூட்டி நல்லிணக்க கூட்டங்களும், வன்கொடுமை தடுப்புச்சட்ட கூறுகள் குறித்து காவல் அதிகாரிகள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளைக்கொண்டு கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டது.
மேலும், ஏழாவது நாளான இன்று நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சிறப்புத்தகுதி பெற்றோருக்கான பரிசுகளும், மத நல்லிணக்க கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் மனித நேயம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் .பீட்டர் ஞானராஜ். ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் வினோத், ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

