முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்டம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்த வெளி விளையாட்டு மைதானத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு .அவர்கள், பரிசு கோப்பை, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கத்தொகையிைனை வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இளைஞர்களின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 25.01.2026 முதல் 08.02.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” எனும் தலைப்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
வட்டார அளவில் நடத்தப்பட்ட கபடி, கைப்பந்து, கேரம், கயிறு இழுத்தல் மற்றும் எரிபந்து போட்டிகளில் முதலிடம் வெற்றி பெற்ற வீரர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றனர். மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.6,000/-பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.4,000/-மற்றும் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.2,000/- பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மண்டல முதுநிலை மேலாளர் (கோவை மண்டலம்) திரு.அருணா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அலுவலர் திருமதி இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

