வரும் 1 ம் தேதி அரசு மதுபான கடைகள் மூடப்படும்
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் வடலூர் இராமலிங்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 1 ம் தேதி அரசு மதுபான கடைகள் மூடப்படும் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் உத்தரவு :
திருவள்ளூர் ஜன 30 : திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த மதுக்கூடங்கள் அனைத்தும் வடலூர் இராமலிங்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 1 ம் தேதி கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது :
தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மது கூடங்கள்) விதிகள் 2003-ன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், (கிளப்புகள்) ஹோட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் இராமலிங்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
மேலும் உத்தரவை மீறி மதுக்கூடங்கள் தி றப்போர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் எச்சரித்துள்ளார்.

