மகாத்மா காந்தியடிகள் 79 ஆவது நினைவு தினம்
![]()
மகாத்மா காந்தியடிகள் 79 ஆவது நினைவு தினம்…!
அமைச்சர் மலர் தூவி மரியாதை…!
ஈரோடு ஜனவரி 30
இந்திய திருநாட்டிற்க்கு சுதந்திரம் பெற்று தந்த தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 79வது நினைவு தினத்தையொட்டி கருங்கல்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் அவர்கள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கருங்கல்பாளையத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி வெங்கடாஜலம், ஈரோடு மாநகராட்சியின் துணை மேயர் வே. செல்வராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் ஆ. செந்தில்குமார், மற்றும் மண்டலக்குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

