தடைசெய்யப்பட்ட131கிலோகுட்காபறிமுதல்2பேர்கைது
![]()
திருவள்ளூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 131 கிலோ குட்கா பறிமுதல் : 2 பேர் கைது :
திருவள்ளூர் ஜன 29 : திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து மணவாள நகர் போலீசார் பட்டறை பகுதியில் உள்ள கடையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பட்டறை, ராமதாஸ் தெருவில் உள்ள ஏழுமலை கடையில் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஏழுமலை வீட்டில் சோதனை செய்தபோது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 128 கிலோ குட்கா பொருள்களைக் மணவாளநகர் போலீசார் பறிமுதல் செய்தனா்.
இதேபோல் அதே பகுதியில் வெங்கடேசன் கடையில் சோதனை செய்ததில் அவரது கடையில் 3 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்து. இதையடுத்து 3 கிலோ குட்கா என 131 கிலோ குட்காவை பறிமுதல் செய்து. ஏழுமலை வெங்கடேசன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

