தனியார் கல்லூரி 4481மாணவ,மாணவிகளுக்கு கணினி

Loading

ஆவடியில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தில் உயர் கல்வி பயிலும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 4481 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் ஜன 29 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தில் உயர் கல்வி பயிலும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 4481 மாணவ-மாணவியர்களுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் வாயிலாக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகளுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்து உயர் கல்வி பயிலும் கல்லூரி அரசு உதவி பெறும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறார்.திருத்தணியில் 821 மாணவர்களுக்கும், பொன்னேரியில் 1464 மாணவர்களுக்கும், ஆவடியில் 2034 மடிக்கணினிகளையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இன்று 4481 மடிக்கணினிகள் 31 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் கல்வி கற்பதன் மூலம் ஒழுக்கமும், நன்னடத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஆகிய நீங்கள் வாழ்க்கையில் விஞ்ஞானி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களை போலவும், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி போலவும், இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை போலவும் வாழ்வில் திகழ வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கூறினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி  (பூவிருந்தவல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), டி.ஜே.கோவிந்தராஜ் (கும்மிடிப்பூண்டி),  துரைசந்திரசேகர் (பொன்னேரி), ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார்,கல்லூரி முதல்வர் கே. சுதாகர், பேராசிரியர்கள், திரளான மாணவ,மாணவிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares