வீடுகட்ட96 பேருக்கு ரூ-96 லட்சம்நிதிக்கானஅரசாணை
![]()
புதுச்சேரி ஜன-29
புதுச்சேரி மணவெளி தொகுதியில் வீடு கட்ட 96 பேருக்கு ரூ-96 லட்சம் நிதிக்கான அரசாணைகளை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் ஒருங்கிணைந்த பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீட்டுவசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் கல்வீடு கட்டுவதற்காக 96 நபர்களுக்கு ரூபாய் 96.00 லட்சம் நிதி உதவிக்கான அரசாணைகளை சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் வழங்கினார்.
புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் ஒருங்கிணைந்த பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீட்டுவசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளை புதிய கல்வி வீடாக கட்டுபவர்களுக்கு மானியத் தொகை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலமைச்சர் திரு என் ரங்கசாமி அவர்கள் அறிவித்திருந்தார்.
அதன்படி மணவெளி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 96 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கு முதல் தவணையாக தலா ரூ.1.00 லட்சம் வீதம் 96 நபர்களுக்கு மொத்தம் 96 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான அரசாணைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் தனது இல்லத்தில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய முதன்மை செயல் அதிகாரி திரு ரவிச்சந்திரன் உதவி பொறியாளர் திரு அனில்குமார் இளநிலை பொறியாளர் திரு உதயகுமார் களப்பணியாளர்கள் மற்றும் மணவெளி தொகுதி முக்கிய பிரமுகர்கள் மாவட்ட தலைவர் சுகுமாரன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் ஞானசேகர் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் சக்திபாலன் சக்திவேல் தினகரன் டாக்டர் ராஜ்குமார் ராஜகுரு ராமச்சந்திரன் சிவா எஸ் வி எஸ் குமரன் கணபதி வாழுமுனி திருமால் தங்கம் விஜி ராஜதுரை கணபதி கன்னியப்பன் ஹரிகிருஷ்ணன் சரவணன் ஆதார் சக்திவேல் செந்தில் சகாயராஜ் அருள்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

