ஈரோடு பெருந்துறை விசிக புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

Loading

ஈரோடு
ஈரோடு பெருந்துறை விசிக புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்: மாநில நிர்வாகிகள் பங்கேற்பு
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பெருந்துறை சட்டமன்ற தொகுதி மாவட்டச் செயலாளர் வி.விஜயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வெ.கனியமுதன் மற்றும் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் காஞ்சி த.பார்வேந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வாழ்த்துரை வழங்கினர். குறிப்பாக பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு மாவட்டச் செயலாளராக வி.விஜய பலனை நியமனம் செய்தமைக்காக விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., அவர்களுக்கு நன்றி தெரிவித்து வி.விஜயபாலனுக்கு மாலை அணிவித்து  மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உற்சாகத்துடன் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர்கள் எஸ்.எம்.சாதிக், வி.கமலநாதன், ஏ.பி.ஆர்.மூர்த்தி, மண்டல துணைச்செயலாளர் மிசா தங்கவேல் மற்றும் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருந்துறை ஒன்றியச் செயலாளர் சி.அண்ணாமலை அனைவரையும் வரவேற்றார். முன்னதாக அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் ஆட்டோ பாபு மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த ஜூலியட் வின்சிலி, கவிதா, ஈஸ்வரி, அந்தியூர் தீபா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், முக்கிய நிர்வாகிகளான மருதாச்சலம், தேவராஜ், கிருஷ்ணமூர்த்தி, ஒலகடம் வெங்கடேஷ், மணியம்பாளையம் குமார், சென்னிமலை நவீன், ரமேஷ் வீரன் உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக நகரத் துணைச் செயலாளர் அ.ஜெகதீசன் நன்றியுரை ஆற்றினார்.
0Shares