கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரிமூன்று ஒப்பந்தம்
![]()
கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியின் பிஷப் பிரின்ஸ்கால்வின் முன்னிலையில் மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம்
நீலகிரி மாவட்டம் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியின் தலைவரும் கோவை திருமண்டலத்தின் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் பேராயர் பிஷப் பிரின்ஸ் கால்வின் முன்னிலையில் மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி சி.எஸ்.ஐ.
பொறியியல் கல்லூரியில் கோவை திருமண்டலத்தின் புதிதாக பொறுப்பேற்று முதன்முறையாக கல்லூரிக்கு வருகை புரிந்த
பேராயர் பிஷப் பிரின்ஸ் கால்வின் அவர்களை கல்லூரியின் இயக்குனர், தாளாளர்,முதல்வர், மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் அவரை சிறப்பாக வரவேற்றனர். அதன் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.
எத்தியோப்பியா அரசு மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஒப்பந்தம்
காக்னிதோர்ஸ் செயற்கை நுண்ணறிவு துறையுடன் ஒப்பந்தம்
வில்லேஜ் டெக்னாலஜி ஆப் ஸ்கூல்-ன் கீழ் செயலாற்றும் யுமிட்டோரோபோடிக்ஸ், ஒப்பந்தம் ஆகிய மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்
எத்தியோப்பியா நாட்டின் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் அதன் ஆலோசகரான முனைவர் கிருஷ்ணராஜ் ராமசாமி,
காக்னிதோர்ஸ் செயற்கை நுண்ணறிவு துறை நிறுவனர்
சுபாஷினிவெங்கடாசலம் மற்றும் வில்லேஜ்டெக்னாலஜி ஆப் ஸ்கூலின் கீழ் செயலாற்றும் யுமிட்டோரோபோடிக்ஸ்,சார்பாக பாலாஜி ஆகியோர் புரிந்துணர்வு ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
அப்போது பேராயர் கூறுகையில் இந்த புரிந்துணர்வுஒப்பந்தத்தில் மாணவர்கள் முன்னேற்றத்திற்கான,பல வாய்ப்புக்கள் உருவாக்கப்பட
உள்ளது என்றும் ]உலகளாவிய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டபணிகளில் செயல்படுத்தப்பட்டு,அதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னேற்றத்திற்கான,பரிமாற்றங் கள்,ஆராய்ச்சி கட்டுரைகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு,
மாணவர்களுக்கு உதவி தொகையுடன் கூடிய களப்பயிற்சி, மற்றும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு மாணவர்களின் வாழ்க்கை தரத்தை சிறப்பாக அமையவும் இதன் செயல்பாடு முன்னேற்றத்திற்கான,ஒரு புரட்சியை ஏற்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக பெரிய அளவில் உதவும் என்று கூறினார்.
இந்த முக்கிய ஒப்பந்தத்தில் கோவை மேற்கு திருமண்டலத்தின் பொறுப்பாளர்கள்
டேவிட்பர்னபாஸ், அமிர்தம், ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடபட்டது.இதில் கல்லூரியின் இயக்குநர் முனைவர் P.D.அருமைராஜ், தாளாளர் காட்வின் டேனியல், முதல்வர் மெர்சி சாந்தி, ஆகியோரும் பங்கேற்றனர்.

