கோவை கராத்தே போட்டி சான்றிதழ் வழங்கும் விழா

Loading

கோவை
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்த கருப்பு பட்டை மாணவர்களின் திறன் ஆய்வு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிபடுத்திய மாணவ மாணவிகளுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது 
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி, வளாகத்தில், பரத் கராத்தே அகாடமி சார்பாக இரண்டு நாட்கள், கராத்தே பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் கட்டா, மற்றும் குமித்தே  தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சியாக நடை பெற்றது. இந்த பயிற்சியினை சர்வதேச விளையாட்டு வீரர் ப்ரனை ஷர்மா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். தொடர்ந்து கோவையில்,
கடந்த ஒரு வார காலமாக, சாய் காய் டூ கராத்தே அமைப்பு மூலமாக,  கருப்பு பட்டை மாணவர்களின் திறன் ஆய்வு போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் திறம் பட தங்களது திறமைகளை வெளிபடுத்திய மாணவ மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழா, கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கராத்தே இந்தியா அமைப்பின், தலைவர் ஹான்சி பரத் சர்மா, கராத்தே இந்தியா அமைப்பின் ஆர்கனைசிங் கமிட்டி சேர்மனும், பரத் அகாடமியின் சியிஓ சாய் ப்ரூஸ்
மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்
அறிவழகன், பாலமுருகன், முருகானந்தம், மோகன், மோகன், முரளி, செல்வகுமார், வெள்ளிங்கிரி, ரவி சங்கர், சீதாலட்சுமி, மனோஜ், ப்ரகதீஷ்ராஜா, மற்றும் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், என 300 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பூர், திண்டுக்கல், கோவை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து பலவேறு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திறம் பட விளையாடி தங்களது திறமைகளை வெளிபடுத்திய மாணவ மாணவிகளுக்கு ப்ளாக் பெல்ட் சான்றிதழ்கள் வழங்க பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares