கோவையில் நடைபெற்ற சிலம்ப திருவிழா

Loading

கோவை
கோவை மாவட்டம் சோமையனூரில், நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற, சிலம்ப திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவியர்கள்..
மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின், 129வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்டம், கணுவாய் அடுத்த சோமையனூரில், நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக, மாபெரும் சிலம்ப திருவிழா மற்றும் சிலம்ப போட்டிகள்  நடைபெற்றது. சிலம்பப் போட்டிகளுக்கான  ஏற்பாடுகளை, ஆதித்யா சிலம்ப பாசறை நிறுவனரும், தலைமை ஆசானுமாகிய  எம்.எஸ்.ஆர் முத்து பாண்டியும், ஆதித்யா ஆர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் தலைவர் எம். பாண்டியராஜனும்  ஏற்பாடு செய்திருந்தனர். சிலம்ப போட்டிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதற்கான நடுவர்களாக ஏடிஎஸ் ஸ்போர்ட்ஸ் சாமிக்கண்ணு, மாஸ்டர் அகத்தியர் சிலம்ப கலைக்கூடம் கார்த்திக் ராஜா, மாஸ்டர் நித்யா, பயிற்சியாளர் ஏஞ்சல், அகடாமி கணேஷ்குமார், மாஸ்டர் நாச்சியார் சிலம்ப அகடாமி வேல்மணி, மாஸ்டர் ஏஞ்சல் அகடாமி கன்னியப்பன், மாஸ்டர் பாரதியார் அகடாமி யாழினி, மாஸ்டர் ஆதித்யா சிலம்பப் பாசறை பயிற்சியாளர்கள் சரண், அரவிந்தன், கோகிலா ஸ்ரீ, ஆகியோர் நடுவர்களாக  பணியாற்றி மாணவர்களின் திறன் களுக்கு மதிப்பெண்கள் தந்தனர். இந்த விழாவில் கலைநிகழ்ச்சியாக புலி வேடமிட்டு ஆதித்யா சிலம்ப பாசறையின், புலி குட்டிகள் மிதிலேஷ், முஜாமல், சபரி, மித்திரன், ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். போட்டியிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு நேதாஜி மக்கள் இயக்க நிர்வாகிகள், மற்றும் மாநில பொதுச் செயலாளர் நேதாஜி சே போத்திராஜ் ஆகியோர் பாராட்டி வெற்றி பதக்கங்களும், சான்றிதழ்களும், கோப்பைகளும், வழங்கி பாராட்டினர். தொடர்ந்து
ஆதித்யா சிலம்ப பாசறை தலைமையாசன் முத்துபாண்டிக்கு, நேதாஜி மக்கள் இயக்கத்தின் சார்பாக, மாவீரர் சுபாஷ் சந்திர போஸ் விருது வழங்கி பெருமை படுத்த பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares