ஜங்கமநாயக்கன்பாளையத்தில்துணைசுகாதாரநிலையம்

Loading

குருடம்பாளையம் ஊராட்சி ஜங்கமநாயக்கன்பாளையத்தில்
ரூ.81 லட்சத்தில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலையம்
MP கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜங்கமநாயக்கன்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து ரூபாய் 18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் ரூபாய் 63 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜங்கமநாயக்கன்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து ரூபாய் 18 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அதேபோல் அருகில் ரூபாய் 63 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
இவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அங்கன் வாடி மையத்தை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும் திறந்து வைத்தார். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருக்கு அங்கன்வாடி மைய குழந்தைகள் கைகளில் ரோசாப்பு கொடுத்து வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, ஒன்றியச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து அருகில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தையும் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும் திறந்து வைத்தார். தொடர்ந்து கர்ப்பினி பெண்களுக்கு தாய், சேய் நலப்பெட்டகங்களை வழங்கினார். மேலும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலர் சண்முகம், துணை சுகாதார நிலைய மருத்துவர், திமுக மகளிர் அணியினர் உள்பட கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares