கால்வாய் திறந்த வெளியில் இருப்பதால் துர்நாற்றம்
![]()
வீரராகவர் கோவில் அருகே முக்கிய சாலையில் உள்ள கால்வாய் திறந்த வெளியில் இருப்பதால் துர்நாற்றம் காரணமாக நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் இருப்பதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை :
திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு நோய் தீரவும் வேண்டுதலை நிறைவேற்றவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கோவில் அருகில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள கால்வாய் திறந்தவெளியில் இருப்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பக்தர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்தபடி செல்லக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது.
நோய் தீர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திறந்தவெளி கால்வாயில் இருந்து வரும் துர்நாற்றத்தால் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் உடனடியாக திறந்து கிடக்கும் கால்வாயை மூடி நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

