அதிமுக சார்பில் எடப்பாடியார் கோப்பை கிரிக்கெட் போட்டி

Loading

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் எடப்பாடியார் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா டாஸ் போட்டு, போட்டியை தானும் விளையாடி தொடங்கி வைத்தார் :

திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் எஸ்என்எம் ஸ்போர்ட்ஸ் மற்றும் எடப்பாடி யார் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி வருகிற பிப்ரவரி மாதம் நான்காம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை, காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், பெங்களூர், தர்மபுரி போன்ற பிற மாவட்ட மாநிலங்களில் இருந்தும் எம்ஆர்எப் தொழிற்சாலை மற்றும் ஐசிஎப் தொழிற்சாலை சார்பிலும் என மொத்தம் 24 அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டியை முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி. ரமணா டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்து வீரர் ஒருவர் பந்து வீச முன்னாள் அமைச்சர் கிரிக்கெட் மட்டையால் ஓங்கி அடித்து போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் வருகிற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும் இரண்டாம் பரிசாக 50,000 மூன்றாம் பரிசாக 25,000 நான்காம் பரிசாக 15,000  பரிசு வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
முதல் போட்டியில் விளையாடும் இரண்டு அணி வீரர்களுக்கும் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா கைகளைக் குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கே.பி.எம். எழிலரசன், திருவள்ளூர் நகர செயலாளர் ஜி. கந்தசாமி, பூண்டி ஒன்றிய செயலாளர் ராமஞ்சேரி எஸ். மாதவன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இருந்தனர்.
0Shares