வெங்கத்தூர் ஊராட்சியில் குப்பை திருவிழா

Loading

திருவள்ளூர்
வெங்கத்தூர் ஊராட்சியில் குப்பை திருவிழாவை தொடங்கி வைத்து, இரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு :
திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தூர் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாநில அளவில் குப்பைச் சேகரிப்பு இயக்கம் ஜனவரி 21 முதல் 23 வரை கடைப்பிடிக்கும் விதமாக குப்பைத் திருவிழாவை தொடங்கி வைத்து திடக்கழிவுகளை வீடு வீடாகச் சென்று சேகரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு,  திடக் கழிவுகளை பிரிக்கும் குப்பைப்பைகளை பொதுமக்களிடம் வழங்கி, கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு, மாவட்ட ஆட்சியர்  தலைமையில் அனைவரும் தூய்மை உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :
தூய்மை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தூய்மை தொடர்பாக நடைபெற்று வருகிறது. இன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் ஊராட்சியில் குப்பைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று குப்பைத் திருவிழா சிறப்பாக தொடங்கப்பட்டு நடைபெறுகிறது.
இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் மக்கள் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் இரண்டையும் பிரித்து வீடுகளில் இருந்து வழங்க வேண்டும். வீட்டிற்கு வரும் தூய்மைப்பணியாளர்களிடம் இந்த குப்பைகளை பிரித்து தர வேண்டும். தெருக்களிலோ, பொது இடங்களிலோ, மற்ற இடங்களிலோ குப்பைகளை வீசி எறிய கூடாது. பொது இடங்களை தூய்மையாக வைக்க வேண்டும். பொது இடங்களில் பசுமை இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். இது போன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட்டு வருகிறோம் என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து, செவ்வாப்பேட்டையில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ரூ.8.1 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 15 கட்டுமானப் பணிகளையும், வேப்பம்பட்டில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 14 இறுதிகட்ட பணிகளையும்,  ரூ.56 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 13 கட்டுமானப் பணிகளையும், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ரூ.44.5 கோடி மதிப்பீட்டில் அத்திப்பட்டு நந்தியம்பாக்கம் இடையே கட்டடப்பட்டு வரும் மேம்பால பணிகளையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டிட கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை  விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், உதவி இயக்குநர் (பயிற்சி) மோகன், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சௌந்தரி நடராஜ், உதவி செயற்பொறியாளர் கஜலட்சுமி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குணசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares