கல்விஆலோசர்களுக்கு தொழில் முறை மேடைநிகழ்ச்சி

Loading

TECWA 2026 – கல்வி ஆலோசர்களுக்கான ஒருங்கிணைந்த தொழில் முறை மேடை நிகழ்ச்சி. 
சேலம்.ஜன.23 
சேலம் பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் கல்வி ஆலோசர்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்முறை மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. TECWA என்பது இந்தியா முழுவதும் செயல்படும் கல்வி ஆலோசர்கள், அட்மிஷன் கவுன்சிலர்கள் மற்றும் கல்வி சேவை வழங்குபவர்களை ஒரே தொழில் முறை தலைமையில் இணைக்கும் ஒரு சிறந்த தொழில் முறை மேடை ஆகும். TECWA இன் முக்கிய நோக்கங்கள் கல்வி ஆலோசகர், சிறந்த தொழில் முறை ஒத்துழைப்பை வளர்த்தல், அறிவு, அனுபவம் மற்றும் சிறந்த பயிற்சி பகிர்த்தல் கல்வி ஆலோசனை துறையில் தரநிலைகளை உயர்த்துதல் போன்ற பல்வேறு விதமான நோக்கங்களை முழுமையாக கொண்டு செயல்படுகின்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக R.P. சாரதி பொறியியல் கல்லூரி சேர்மன் நித்திஷ் ஹரிஹர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  M. ஆறுமுகம் TECWA நிறுவனர், அருண் கிஷோர் (Vice Chairman), சுவாமிநாதன் (Secretary), சிறப்பு விருந்தினர்கள் R.P. சாரதி பொறியியல் கல்லூரி நித்திஷ் ஹரிஹர் மற்றும் I ZEE Business School, Bangalore.
Main Spencers:
SHOURABH College of Veterinary Rajasthan, MAHALA College of Veterinary Rajasthan, SANSKARAM Veterinary College Haryana, Dhanalakshmi Srinivasan University Perambalur, Trichy.
மேலும் கமலக்கண்ணன், சிலம்பரசன், விஜயாசன், ரவி, காவியதமிழன், பிரகாஷ், விஜயகுமார், கவிதா, முரளி மற்றும் 1000க்கும் மேற்பட்ட கன்சல்டன்சி நிர்வாகத்தினர் திரளாக கலந்து  கொண்டனர்.
0Shares