வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்புதர்ணா போராட்டம்

Loading

சேலம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகர் தர்ணா போராட்டம்!

சேலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாநிலந் தழுவிய மாவட்ட தலைநகர் “தர்ணா போராட்டம்” நடைபெற்றது. இதில், முருக பூபதி மாவட்ட செயலாளர் TNROA வரவேற்புரை ஆற்றினார், மாரியப்பன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (FERA) தலைமை தாங்கினார், நல்லா கவுண்டன் மேனாள் மாநில துணைத்தலைவர் (TNVAOA)கோரிக்கை விளக்க உரையாற்றினார், அருள் பிரகாஷ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (FERA) துவக்க உரையாற்றினார், இளங்கோவன் மாவட்ட பொருளாளர்(TNSOU), சுரேஷ், மோகன்ராஜ், மணிவேல், குணசேகரன், ஆகியோர் சிறப்புரையாற்றினார், செல்லமுத்து, தங்கராஜு, பாபு ஆனந்த், முருகேசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார், அர்த்தனாரி மாநிலத் துணைத் தலைவர்(TNROA) நிறைவுரையாற்றினார்,நன்றியுரையை அகிலன் மாவட்ட பொருளாளர்(TNROA) வழங்கினார்‌.
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பில், வருவாய்த்துறையினரின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரில் தர்ணா போராட்டம் நடத்துவதென சென்னையில் நடைபெற்ற FERA உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பணிபாதுகாப்பு சட்ட வரைவு தமிழக சட்டப் பேரவையில் ஒப்புதல் பெற்று விரைவில் வெளிவர வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் கடந்த காலங்களை விட தற்போது மிக அதிகமான பணிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அரசின் புதுப்புது திட்டங்கள், உரிய கால அவகாசமின்றி வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட அதிமுக்கிய பணிகள், நீதிமன்ற தீர்ப்புகளின்படி ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுதல், ஆண்டிற்கு சுமார் 1 கோடி இணைய வழி சான்றுகள், அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் பொது மக்களுக்கான பட்டா உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணிகள், அரசு விழாக்கள் என பணிப்பளு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் அல்லாமல், நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்ட எண்ணிக்கையில் பணியிடங்கள், கணினி உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை, உரிய கால அவகாசம் வழங்காமல் அவசர கதியில் பணிகளை முடித்திட நிர்பந்தம் செய்தல் உள்ளிட்டவையால் வருவாய்த்துறை அலுவலர்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.
அரசின் கட்டளைகளை திறம்பட நிறைவேற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்க வேண்டியடும். பொது மக்களுக்கான அன்றாட தேவைகளை நிறைவேற்ற ஓய்வின்றி உழைக்கும் அலுவலர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்!
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட அரசு ஆணைகள் விரைவில் பெற வேண்டியும், நில அளவைத்துறையில் புற ஆதார பணி நியமனங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும் எனவும், தரம் குறைக்கப்பட்ட எம்.எப்.எஎஸ். பணியிடங்களை விரைவில் வழங்க வேண்டுயும், புதிதாக ஏற்படுத்தப்பட்ட குறுவட்டங்களுக்கு நில அளவர் பணியிடங்களை உடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை FERA சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிருவாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயம் செய்திட வேண்டும், பணிக்கிராமங்களில் தங்கிட பணி செய்வதை நிர்பந்திக்கக் கூடாது என்பன உள்ளிட்டவற்றை அரசிடம் வலியுறத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் ‘பிரிவு சி’ கருணை அடிப்படை பணி நியமனங்களை தொடந்து வழங்கிடவும், அனைத்து காலியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிடவும் வலியுறுத்தி வருகிறோம். 2026 சட்டபேரவை தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நிதி சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுக்க மிகச்சரியான காலகட்டத்தில் உள்ளோம். நமது வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு முன்னோட்டமாக நடைபெற்ற “மாவட்டத் தலைநகர் தர்ணா போராட்டத்தில்”
9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகர் “தர்ணா போராட்டத்தில்” ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களும், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.
0Shares