குன்னூர் இயற்கை பாதுகாப்பு&வாகனபாதுகாப்பு

Loading

குன்னூரில் இயற்கை பாதுகாப்பு மற்றும் வாகன பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளையின் சார்பாக காவல் துறையினரின் பரிந்துரையின் பேரில்  மேட்டுப்பாளையம்- கல்லார் பகுதியில் இருந்து குன்னூர் வரை விழிப்புணர்வு தொடர் ஓட்டம்நடைபெற்றது. இந்த ஓட்டத்தில் கல்லாரில் இருந்து குன்னூர் வரை கீழ் பாரத் நகர் பகுதியை கீழ்பரத்  நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் நித்தீஸ்வரன்  சுமார் 27 கிலோ மீட்டர் தூரமும், ஓட்டுபட்டறை பகுதியைச் சார்ந்த மாணவி ஆசிகா சுமார் 17 கிலோமீட்டர் ஓடி குன்னுரை வந்தடைந்தனர். பின்னர் குன்னூர் புறக்காவல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் குன்னூர் காவல் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கரன், பண்ணாரி  ஆகியோர் இவர்களை  ஊக்கப்படுத்தி இயற்கை மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வுகள் கொடுத்தனர்.
இந்த விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு பாதுகாப்பாக மேட்டுப்பாளையம் சுவாசம் ஆம்புலன்ஸும்
அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாகிகளும் பின் தொடர்ந்தனர்.மேலும் அவர்களுக்கு நான்கு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம், இந்திரா நகர் பொதுமக்கள் மற்றும் நீலகிரி தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் செயலாளர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும்
இந்த தொடர் ஓட்டத்தில் நெகிழிகளை பயன்படுத்தக் கூடாது என்பதும் அதிக வேகம், தலைக்கவசம் போன்றவற்றை பற்றி மையமாக கொண்டு நடத்தப்பட்டது..
0Shares