ஆதிதிராவிடர்வன்கொடுமைதடுப்புசட்டம்
![]()
கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த செம்மேடு காந்திநகர் பகுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வன் கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கோவை மாவட்ட
ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் நாகராஜன், கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எஸ்.இ-எஸ்டி சமூக மக்களுக்கு எதிரான வன் கொடுமை தடுப்பு சட்டம் குறித்து வழக்கறிஞர் ஜார்ஜ் விளக்கவுரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது
இந்தியாவில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு சட்டமாக இந்த எஸ்இ எஸ்டி சட்டம் செயல்பட்டு வருகிறது. இது சாதி அடிப்படையிலான கொடுமைகளுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது, மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டிக்க வழிவகை செய்கிறது, குறிப்பாக பிரிவு 3-ன் கீழ் பல குற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், இதில்
முக்கிய அம்சங்களின்
நோக்கமாக , எஸ்இ எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்முறை, துன்புறுத்தல், இழிவுபடுத்துதல் போன்ற செயல்களைத் தடுத்தல், சட்டபிரிவு இந்திய பாராளுமன்றத்தால் 1989-ல் இயற்றப்பட்டது சட்ட எண் 33/1989, எனவும்,
குற்றங்களின் வரையறையாக வன்கொடுமை என்ற சொல்லுக்குச் சட்டப்பூர்வ விளக்கத்தை அளித்து, பிரிவு 3-ன் கீழ் பல குற்றங்களை வரையறுத்துள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கபடுகிறது , மேலும் இதில் உடனடி கைது மற்றும் விசாரணைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2015-ல் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டம் 2016-ல் நடைமுறைக்கு வந்து, குற்றங்களின் பட்டியலை விரிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார். இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேட்டு விழிப்புணர்வு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உறுப்பினர் சுரேஷ் குமார், தமிழ் புலிகள் கட்சி சார்பாக நந்தன் தம்பி, நொய்யல் வெள்ளியங்கிரி, சுரேஷ், சதிஷ், விஜயகுமார், பவித்ரன், ஜீவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

