சேலம்வைஸ்யா கல்லூரியில்சமத்துவப் பொங்கல்விழா

Loading

சேலம்
சேலம் வைஸ்யா கல்லூரியில் சமத்துவப்பொங்கல் விழா கொண்டாட்டம்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் மாசிநாயக்கள்பட்டியில் உள்ள வைஸ்யா கல்லூரியில்  பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வின் தொடக்கமாகக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.வெங்கடேசன் அவர்கள் சமத்துவப்பொங்கல் விழா கொண்டாட வந்திருந்த பல்வேறு சமயத்தைச் சார்ந்த பெருமக்களையும் விவசாயப் பெருமக்களையும் பேராசிரியர்களையும் மாணவ. மாணவிகளையும் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் நரசுஸ் திரு.பா.சிவானந்தம் அவர்கள் சிறப்புரை ஆற்றியதோடு, டி.பெருமாபாளையம் கிராமத்திலிருந்து வந்திருந்த விவசாயப் பெருமக்களுக்கும் பல்வேறு சான்றோர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். கல்லூரியின் சார்பாக மத நல்லிணக்கத்தை உணர்த்தும்விதமாக சமத்துவப் பொங்கலும் விவசாயிகளின் சார்பாக பாரம்பரியமுறை பொங்கலும் வைக்கப்பட்டது. இதில் சேலம் ராமகிருஷ்ண மிஷன் செயளர் சுவாமி யதாத்மானந்தர், இன்பென்ட் ஜீசஸ் சர்ச்சினுடைய பாதர் ஜெய் பெர்னாட் ஜோசப், ஜான் ராபர்ட், சுர்ஜித், சகாயராஜ் மற்றும் இஸ்லாமிய சமயப் பெருமக்களான ஆசிக் உசேன், அப்துல் காதர், முகமதுபதுருதீன், முஜிபுர் ரகுமான், அபுதாகிர் ஆகியோர் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.
கல்லூரி மாணாக்கர்களுக்குப் பொங்கல் வைத்தல், மெஹந்தி போடுதல், கோலம் போடுதல், முக ஓவியம், உறியடித்தல், இசை நாற்காலி, எலுமிச்சை ஸ்பூன், கயிறு இழுத்தல், பலூன் சேர்த்தல், சாக்குப் பந்தையம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சியாக காவடியாட்டம், சிலம்பாட்டம், மற்றும் மாணவிகள் நடத்திய பைக்சேஷா ஆகியன இடம்பெற்றன. இதை அனைவரும் கண்டுகளித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தச் சமத்துவப் பொங்கல் விழாவில் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்களும் கலந்துகொண்டு பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
0Shares