பணியாளர்களுடன் பொங்கல் அர்பித் ஜெயின் ஐஏஎஸ்

Loading

ஈரோடு மாநகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா: பணியாளர்களுடன் இணைந்து பொங்கலிட்டு கொண்டாடிய ஆணையாளர் அர்பித் ஜெயின் ஐஏஎஸ்!
ஈரோடு:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று சமத்துவப் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் ஐஏஎஸ்., விழாவினை சிறப்பித்தார்.
சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்
விழாவின் தொடக்கமாக, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர், மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் ஐஏஎஸ் அவர்கள், பணியாளர்களுடன் இணைந்து தீ மூட்டி புதுப்பானையில் பச்சரிசி மற்றும் வெல்லம் இட்டு பொங்கலிட்டார். பானையில் பொங்கல் பொங்கி வரும் வேளையில், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் “பொங்கலோ பொங்கல்” என்று உற்சாக முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உற்சாகத்தில் பணியாளர்கள்
இந்த விழாவில் மாநகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என அனைவரும் ஜாதி, மத பேதமின்றி சமத்துவமாக கலந்துகொண்டனர். பொங்கல் தயார் செய்யப்பட்ட பிறகு, சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டு அங்கிருந்த அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது. ஆணையாளர் அவர்கள் பணியாளர்களுடன் சகஜமாக உரையாடி, தனது பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அரசு அலுவலகத்தில் இத்தகைய பாரம்பரிய கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது பணியாளர்கள் இடையே ஒற்றுமையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்தது.
0Shares