ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15ஆவது தேசிய மாநாடு

Loading

அகில இந்தியரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15ஆவது தேசிய மாநாடு & 8 வது தேசிய குழு நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா

சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது தேசிய மாநாடு. மற்றும் 8வது தேசியக் குழு நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நிறுவனர் தேசிய தலைவர். ஹென்றி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, விஐடி வேந்தர் ஜி. விஸ்வநாதன், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் தமிழ் முன் அன்சாரி, மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி முன்னாள் காவல் துறைதலைவர் எம்.சுப்பிரமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் . 8வது தேசிய குழுவின்புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட தேசிய தலைவராக நிறுவனர் ஹென்றி ஆறுமுகம், தேசிய பொதுச் செயலாளராக வி.ஜெயச்சந்திரன்,தேசிய பொருளாளராக ஆர். சந்திரசேகர், தேசிய செயல் தலைவராக ஜெ. செந்தில்குமார்,
தேசிய நிர்வாக செயலாளராக கிருஷ்ணகுமார், தேசிய வளர்ச்சி செயலாளராக எ. நரேஷ் சந்த் தேசிய துணைத் தலைவர்களாக எஸ்.ராஜசேகர்,
ஆர். பிரசன்ன குமார் ஆகியோர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் தமிழகம் மற்றும் இதர மாநில நிர்வாகிகளும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

அகில இந்திய ரியல்
எஸ்டேட் கூட்டமைப்பின் வழிகாட்டல் நூலினை திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மேலும் உரையாற்றிய தமீம்முன் அன்சாரி FAIRA கூட்டமைப்பின் சார்பில் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் வறுமை கோட்டுக்கும் கீழ் படிக்க வசதியில்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மாநாட்டின் இறுதியில் மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்த 118 திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தல். பதிவுத்துறை உருவாக்குறை ரெகுலர் ஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையால் DTCP department சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 10க்கும் மேற்ப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இச்சிறப்புமிகு மாநாட்டில்
FAIRA கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் – உறுப்பினர்கள் மற்றும் புதியதாக இணைந்த பில்டர்ஸ், லே-அவுட் டெவலப்பர்ஸ், இன்ஜினியர்ஸ், ஆர்க்கிடெக்ட் உள்ளிட்ட தொழில் முனைவோர்கள், தமிழகம் மற்றும் பிற மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

0Shares