அதிமுக கிளை கழக நிர்வாகிகள் தேர்தல் பணி பயிற்சி
![]()
வெங்கத்தூர்அதிமுக பாக கிளை பொறுப்பாளர்கள் கிளை கழக நிர்வாகிகள் தேர்தல் பணி பயிற்சி கூட்டம் : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா பங்கேற்பு :
திருவள்ளூர் ஜன 13 : திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பாக கிளை பொறுப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல் பணி பயிற்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி. ரமணா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் எஸ்.சுதாகர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரை பூத் கமிட்டி பொறுப்பாளர் க.விஜயகாந்த் பட்டாசு வெடித்தும் ஆளுயர மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றார்.இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர். விஜயகுமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
அதிமுக அரசின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துச் சொல்லி 2026 தேர்தலில் அதிமுகமாக வெற்றி பெற பாட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, பொங்கல் பரிசு தொகுப்பு அதிமுக வழங்கிய போது ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்ட தற்போதைய முதலமைச்சர், அவர் ஆட்சி பொறுப்பேற்று ஒரு ரூபாய் கூட தராத நிலையில் ஆட்சி முடியும் தருவாயில், 3 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து பொதுமக்களை மாற்றுவதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றிய அரசாக திமுக அரசு இருப்பதை பொதுமக்களிடம் எடுத்து சொல்லி 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக அமர இன்று முதல் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்பதை வலியுறுத்தும் வகையில் பாக கிளை பொறுப்பாளர்களுக்கு கடிகாரத்தை வழங்கி தேர்தலுக்குள் தங்கள் கடமைகளை சீரும் சிறப்புமாக செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதில் கடம்பத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

