நீலகிரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்11335மனு

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு , அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 11335 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கோத்தகிரி நடுஹட்டி பகுதியில் தலா ரூ.2.98 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்பினை 3 கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளையும், 20.01.2026 அன்று திருப்பூர் மாவட்டத்தில், நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாட்டில், கலந்து கொள்வதற்கு ஏதுவாக, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தினை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் பயன்பாட்டிற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், சென்னை தீவு திடலில் 05.01.2026 அன்று நடைபெற்ற விழாவில் 155 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்திற்கு வழங்கிய 5 வாகனங்களின் சாவிகளை ஓட்டுநர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)
ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பழனிச்சாமி (நிலம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் லோகநாயகி (பொது), கண்ணன் (கணக்குகள்), மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares