பா.ஜ.க நிர்வாகிகளை தாக்கிய திமுகரவுடி கும்பல்
![]()
தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாதத்தின் போது பா.ஜ.க நிர்வாகிகளை தாக்கிய திமுக நிர்வாகிகளை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூரில் பாஜக சாலை மறியல் போராட்டம் :
திருவள்ளூர் ஜன 12 : தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பாஜகவைச் சேர்ந்த மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். அப்போது, அந்த விவாதம் வாக்குவாதமாக முற்றியது. இதையடுத்து பாஜக மாநில இளைஞரணி தலைவரை திமுக ரவுடி கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் காமராஜர் சிலை முன்பு மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் 25 க்கும் மேற்பட்டோர் சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொருளாதார அணிப்பிரிவு தலைவர் சதீஷ், இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் தினேஷ், செயலாளர் ராக்கேஷ், மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயலட்சுமி, நிர்வாகிகள் சித்ராதேவி, உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டவுன் காவல் நிலைய போலீசார் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக இளைஞர் அணியினரை கைது செய்ய முயற்சித்தனர். அப்போது, போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 25 பேரை தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நகரின் முக்கிய பகுதியான காமராஜர் சிலை அருகே பரபரப்பாக காணப்பட்டது.

