ராஜேந்திரன்நினைவுமாவட்டஅளவில்கைப்பந்துபோட்டி

Loading

கோவை
சோமையம்பாளையம் ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமியில்
அமரர் ராமலிங்கம் மற்றும் அமரர் ராஜேந்திரன் நினைவு
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது 
கோவை கணுவாய் அருகே சோமையம்பாளையத்தில் கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து, கைப்பந்து விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த அமரர் வி சி ராமலிங்கம் மற்றும் அமரர் என் ராஜேந்திரன் ஆகியோரின் நினைவாக, 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகளை நடத்தினர்.
கைப்பந்து விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த அமரர் வி சி ராமலிங்கம் மற்றும் அமரர் என் ராஜேந்திரன் ஆகியோரின் நினைவாக, 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகளை, கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து 3 நாட்கள் நடத்துகிறது.
கோவை கணூவாய் அருகே உள்ள ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்க விழாவில் ரெசெட் மற்றும் ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி எஸ் ஆர் ஆறுச்சாமி கூட்டத்தினரை வரவேற்றார்.
தொடர்ந்து கைப்பந்து ஜாம்பவான்களான அமரர் வி சி ராமலிங்கம் மற்றும் அமரர் என் ராஜேந்திரன் ஆகியோரின் திரு உருவப்படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
போட்டிகளை கீர்த்தி மான் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர்  ஏ கோகுல் கிருஷ்ணன், முன்னாள் இந்திய கைப்பந்து வீராங்கனையும், ஆன்ட் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலருமான லதா ஏ ஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 60 சிறுவர் மற்றும் சிறுமியர் இந்த நாக் அவுட் மற்றும் லீக் போட்டிகளில் பங்கேற்றனர். எஸ் வி ஜி வி, கீர்த்திமான் மேல்நிலைப்பள்ளி, கிரசென்ட் மேல்நிலைப்பள்ளி மற்றும் அகர்வால் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றன.
இவ்விழாவில் விஜயலட்சுமி ராமலிங்கம், சரஸ்வதி சீனிவாசா, முன்னாள் இந்திய கடற்படை கைப்பந்து பயிற்சியாளர் வி ஜெயபிரகாஷ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆஸ்வான் மற்றும் ஓய்வுபெற்ற வருமான வரி அதிகாரி கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
0Shares