சிறப்புமுகாம்மாவட்டதேர்தல்அலுவலர்மு.பிரதாப்ஆய்வு
![]()
கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் ஆய்வு :
திருவள்ளூர் ஜன 06 : இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணியை மேற்கொள்ள கடந்த 27.10.2025 அன்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதில், 04.11.2025 முதல் 14.12.2025 வரை வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு பெறப்பட வேண்டும் என்றும், 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்றும், 19.12.2025 முதல் 18.01.2026 வரை உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலமாகவும், 19.12.2025 முதல் 10.02.2026 வரை விசாரணை மற்றும் சரிபார்ப்பு செய்து 17.02.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக, 27.12.2025 (சனி), 28.12.2025 (ஞாயிறு), 03.01.2026 (சனி) மற்றும் 04.01.2026 (ஞாயிறு) ஆகிய தினங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
பொது மக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து இம்முகாம்களில் வழங்கிடு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பான சிறப்பு முகாமினை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துக்கோட்டை வட்டம், பெரிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், ஊத்துக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து, திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 26.வேப்பம்பட்டு ஊராட்சி திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பான சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதில் உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியருமான ஆ.ராஜேஷ்குமார், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

