மலைத்தேனீக்கள் பெண்கள், முதியவர் எனகொட்டியது
![]()
திருவள்ளூர் அருகே மரத்தை வெட்டும் போது அதிலிருந்து மலைத்தேனீக்கள் கிளம்பி பெண்கள், முதியவர் என 15-க்கும் மேற்பட்டோரை கொட்டியதால் மருத்துவமனையில் சிகிச்சை : முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா நேரில் ஆறுதல் :
திருவள்ளூர் டிச 30 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் ஊராட்சி கம்மவார் பாளையத்தில் உள்ள மரத்தை ஒருவர் வெட்டி கொண்டிருந்தபோது அதிலிருந்து புறப்பட்ட மலைத் தேனிக்களானது அங்கு 100 நாள் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் அவ்வழியாக சென்ற முதியவர் என 15-க்கும் மேற்பட்டோரை கை, கால், முதுகு என பெரும்பாலான இடங்களில் கடித்துள்ளது. இதனால் பதறிப் போன கிராம மக்கள் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

