வடமாநிலஇளைஞரைவெட்டிய 17வயதுமாணவர்கைது

Loading

திருத்தணி வரும் ரயிலில் கஞ்சா போதையில் ரீல்ஸ் மோகத்தில் வடமாநில இளைஞரை பட்டாகத்தியால் வெட்டிய நான்கு 17 வயது மாணவர்களை கைது செய்த போலீசார் .. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் :
திருவள்ளூர் டிச 30 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகில் ரயில்வே குடியிருப்பு பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் நேற்று மாலை கத்தியால் வெட்டப்பட்டு உடலில் 20 இடங்களில் பலத்த காயங்களுடன்  ஆபத்தான நிலையில் இருப்பதாக அந்த பகுதியில் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில்  திருத்தணி போலீசார் விரைந்து சென்று வடமாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர்.
வடமாநில இளைஞரை வெட்டியவர் யார் என்று திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.   விசாரணையில் காயம் பட்ட அந்த வாலிபர் சூரஜ் என்பதும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சார்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் திருத்தணி வரும் புறநகர் மின்சார ரயிலில் வந்த இவரை ரயிலில் வைத்து ரீல்ஸ் மோகத்தில் கஞ்சா போதை மாணவர்கள் நந்தகோபால்  (17), விக்கி என்கின்ற விக்னேஷ் (17) சந்தோஷ் என்கின்ற குல்லு  (17)  சந்தோஷ் (17)  ஆகிய நான்கு மாணவர்களும் வட மாநில இளைஞரை  கத்தியால் வெட்டுவது போல் வீடியோ எடுத்து  இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் வைரல் ஆக்கியுள்ளனர்.
அதன் பிறகு திருத்தணி ரயில் நிலையத்தில் அழைத்து வந்து அந்த வட மாநில இளைஞரை ரயில்வே குடியிருப்பு பகுதியில் கடுமையாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து  வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவத்தில்  நான்கு மாணவர்களை திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கஞ்சா போதையில் வட மாநில இளைஞரை சரமாரியாக கத்தியால் வெட்டும் வீடியோ எடுத்து அதையும் சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருக்கும் சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கத்தியால் அந்த இளைஞரை வெட்டும் வீடியோ பார்க்கும் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. 17 வயது சிறுவர்களாக இருந்தாலும் போதையில் வெறியாட்டம் ஆடிய இந்த 4 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
0Shares