மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிமு.பிரதாப்ஆய்வு
![]()
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உதவி மையம் : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் டிச 30 : சென்னை பெருநகர மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய மேற்பார்வையாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், சென்னை பெருநகர மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கம் அரசினர் நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பான உதவி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் பெறப்பட்ட படிவங்கள் தொடர்பாக கேட்டறிந்து, அப்படிவங்களை கணினிமயமாக்கல் உள்ளிட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறித்தினார்.
இதில் வாக்காளர் பதிவு அலுவலரும் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியருமான சதீஷ்குமார், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஜெயகுமார் (மதுரவாயல் வட்டாட்சியர்), தில்லி (உதவி வருவாய் அலுவலர்), வாக்குச்சாவடி நிலைய மேற்பார்வையாளர்கள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

